பலன்: தொழிலில் மேன்மை அடைவோம்
நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப்
பயனென்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவாரே
பொருள்:
நயனங்கள் மூன்றுடை நாதன் - சிவன்
வேதம் - நான்கு வேதங்கள்
நாரணன் - நாராயணன், விஷ்ணு
அயன் - பிரம்மா
மும்மூர்த்திகளும், வேதங்களும் வணங்குவது அன்னை அபிராமயையே. அன்னையின் திருவடிகளை துணையாக கொண்ட அடியவர்கள், தேவ மகளீர் ஆடி, பாடி உல்லாசமாக களிக்கும் சுவர்க்க லோகம் கிடைத்தாலும், பொன் சிம்மாசனம் கிடைத்தாலும் அவற்றை விரும்ப மாட்டர்கள். அன்னையின் காலடியிலேயே தங்குவார்கள்.
அன்னையின் திருவடியை காட்டிலும் பெரியது ஒன்றும் இல்லை.
பாடல் (ராகம் - ஸ்ரீ ரஞ்சனி, தாளம் - ஆதி திஸ்ர நடை) கேட்க