பலன்: கடன் தீரும்
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒருகாலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மீன்களே
பொருள்:
கையில் பொருள் எதுவும் இல்லாத காரணத்தால், நாம் ஒருவரிடம் சென்று நின்று கையேந்தினால், அவர்களும் நம் இல்லாமையை சொல்லிக்காட்டி இழிவு படுத்துவார்கள். அவ்வாறு நாம் இழிவு படாமல் இருக்கவேண்டும் என்றால், திரிபுரையான அம்பாளிடம் செல்லுங்கள். ஏனென்றால் என்னை (அபிராமி பட்டரை) ஒருகாலத்தில், தவம் எதுவும் செய்யாத, நல்லனவற்றை கல்லாத கயவர்களோடு சேரவிடாமல் காத்தவள் அவளே.
பாடல் (ராகம் - ஷண்முகப்ரியா, தாளம் -- விருத்தம்--) கேட்க