பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் தி.மு.க. மூத்த வழக்கறிஞர் வில்சன் நோட்டீஸ் விடுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளீர்கள். சொத்துப் பட்டியல் தொடர்பாக அண்ணாமலை 48 மணி நேரத்தில் பதிலளிக்க வேண்டும். உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அவர்மீது சிவில் அல்லது கிரிமினல் வழக்கு தொடரப்படும். மேலும், இழப்பீடு தொகையாக உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.50 கோடி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சொத்துப் பட்டியல் விவகாரம் - அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ்
Tamil News
