கடந்த 2 ஆண்டுகளில் 7 கோவில்களில் ராஜகோபுரம் கட்ட ரூ.36 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தில், நன்னிலம் தொகுதி வாஞ்சிநாதசுவாமி கோவில் குடமுழுக்கு பணிகளை விரைவாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சரின் அறிவுரைப்படி 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 509 கோவில்களில் திருப்பணிகள் செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 47 கோவில்களில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினார். மேலும், கடந்தாண்டு 118 கோவில்கள் திருப்பணிகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், நன்னிலம் தொகுதி வாஞ்சிநாதசுவாமி கோவிலில் 21 கோடி ரூபாய் செலவில் 23 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குடமுழுக்கு திருப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found