ஐ ஸ்பேஸ் நிறுவனம் 2010-ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் சந்திரனுக்கு வணிக ரீதியான போக்குவரத்து சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் விண்கலங்கள் மட்டும் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளன. இதற்கிடையே, ஐ ஸ்பேஸ் நிறுவனத்தின் ஹக்குடோ என்ற விணகலம் கடந்த டிசம்பரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. கடந்த மாதம் சந்திரனின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைந்த ஹக்குடோ விண்கலம், 100 கிலோமீட்டர் உயரத்தில் சந்திரனைச் சுற்றி வந்தது. இந்நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் சந்திரனில் தரையிறங்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் சந்திரனில் தரையிறங்குவதற்கு முன் அந்த விண்கலத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் தரையிறங்கிய போது அந்த விண்கலம் மோதி நொறுங்கியது. இதன்மூலம் சந்திரனில் தரையிறக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என விண்கலத்தைச் செலுத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த 2019-ல் இஸ்ரேலைச் சேர்ந்த விண்கலம் சந்திரனில் தரையிறங்கிய போது மோதி நொறுங்கி அழிந்தது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found