நந்தினியுடன் ஜாலியாக விளையாடிய ஆதித்த கரிகாலன்.. ட்ரெண்டாகும் வீடியோ


விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் -2. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.

'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தை வெளிநாட்டு ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விக்ரமின் பதிவு சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது, 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் புரோமோஷனின் போது ஐஸ்வர்யா ராயுடன் ஜாலியாக விளையாடிய வீடியோவை நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்

Previous Next

نموذج الاتصال