கர்நாடகா தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்பட்ட விவகாரம்- அதிமுக கடிதம்?


கர்நாடகா சட்டசபை தேர்தலில் காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த மனுவை அதிமுக பெயரில் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு ஏதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்கடிதத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. தேர்தல் நடத்தும் அலுவலரின் தவறான புரிதலால் ஓபிஎஸ் தரப்பு வேட்புமனுவை ஏற்றுக்கொண்டுள்ளார். புலிகேசி நகர் தொகுதியை தவிர மற்ற தொகுதியில் போட்டியிடவில்லை. உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஒப்புக்கொண்டதை சுட்டிக்காட்டி அதிமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous Next

نموذج الاتصال