பகலில் அத்தனை பெரிய சூரியன் வெளில பிரகாசமா எரிஞ்சுகிட்டு இருக்கு... பெரிய குளிர்பதனபடுத்தப்பட்ட அலுவலகங்களில் அடுக்குமாடிகளில் உள்ளே டியூப்லைட்டுகளை போட்டுக்கொண்டு வேலை செய்வது நல்லவா இருக்கு? வெளியே இருக்கும் சூரிய ஒளியை அலுவலகங்கள், குடோன்களுக்குள் கொண்டு வந்தால் என்ன? சோலார் பேனலா? அல்ல. சூரிய ஒளியையே அலுவலகங்களுக்குள் கொண்டுவந்தால் என்ன? அது எப்படி முடியும்? சோலார் டியூப்கள் மூலமாக... சோலார் டியூப்புகளை கட்டிடத்தின் மேற்புறத்தில் மாட்டி, கூரையில் இருந்து நாம எந்த அறைக்கு வெளிச்சம் வரணும்னு நினைக்கறமோ அந்த அறைக்கு கொண்டுபோகலாம்.
சோலார் டியூப்புகள் வளைந்து, நெளிந்து எப்படி வேண்டுமானாலும் போகலாம். சூரிய வெளிச்சம் அதன்மேலுள்ள ஒரு மெடலில் படும், அது அதை அப்படியே அதனுள் இருக்கும் மெடல்கள், குவிக்கண்ணாடிகள் வழியே எதிரொலித்து அறைக்குள் சூரிய வெளிச்சம் வரும். எந்த மின்சார செலவும் இல்லை. சூரிய வெளிச்சம் அப்படியே குழாயில் ரிஃப்ளெக்ட் ஆகி அறைகளுக்கும் வருகிறது. சூரியன் பிரகாசமாக இல்லாத சமயம் என்ன செய்வது? லைட்டை போட்டுக்கவேண்டியதுதான். மேலும் போடோவால்டிக் தொழில்நுட்பம் மூலம் பேட்டரி சார்ஜ் ஆகி மின்விளக்குகளை எரியவைக்கவும் முடியும். இரவிலும் வெளிச்சம் வரும். இனி சில ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பம் பரவலாகையில் ஏகபட்ட மின்சார செலவு மிச்சம் ஆகும்.