கோர்ட் அதிரடி தீர்ப்பு- ஓபிஎஸ் அணியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம். தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் என கூறினார். இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ். தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன், உயர்நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு கிடைத்த வெற்றி. நீதி வெல்லும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என கூறினார். உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Previous Next

نموذج الاتصال