மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, நாட்டில் மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ படிப்புக்கான இடங்களும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்ததைவிட எண்ணிக்கையில் மிகவும் அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்ததாகவும், தற்போது அது 660 ஆக உயர்ந்து இருப்பதாகவும் கூறியுள்ளார். இது 71 சதவீத உயர்வு ஆகும். இதைப்போல 2014-க்கு முன்பு 51 ஆயிரத்து 348 ஆக இருந்த எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான இடங்கள் தற்போது 97 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து ஆயிரத்து 43 இடங்களாக உயர்ந்துள்ளது. இதில் 52 ஆயிரத்து 778 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 48 ஆயிரத்து 265 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ளன. முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களும் 100 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து உள்ளது. 2014-ம் ஆண்டு 31 ஆயிரத்து 185 ஆக இருந்த முதுநிலை படிப்புகள், 65 ஆயிரத்து 335 ஆக அதிகரித்து உள்ளது. இந்த தகவல்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மன்சுக் மாண்டவியா, "காலம் மாறியதால் நாடு மாறியது" என குறிப்பிட்டு பெருமைப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found