சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது


அரவக்குறிச்சி அருகே, சேவல் சண்டை நடத்தியதாக, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ., திருநாவுக்கரசு உள்ளிட்ட போலீசார், வேலம்பாடி பகு தியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தடையை மீறி சேவல் சண்டை நடத்தியதாக பாப்பநாயக்கன்பட்டி ஜெயராமன் (வயது 53), பார்த்திபன் (23), சிவக்குமார் (48), பள்ளப்பட்டி ஆனந்தகுமார் (43), சென்னை, அரும்பாக்கம் பாலசுப்பிரமணி (34); ஆகிய ஐந்து பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து ஒரு சேவல், 1,700 ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Previous Next

نموذج الاتصال