கடந்த நிதி ஆண்டை விட அதிகம் நேரடி வரி வசூல் ரூ.13.73 லட்சம் கோடியை எட்டியது


இந்தியாவில் இந்த நிதியாண்டில் இதுவரை நிகர நேரடி வரி வசூல் 17 சதவீதம் அதிகரித்து ரூ .13.73 லட்சம் கோடியை எட்டி உள்ளது. இது 2022-23-ம் நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட இலக்கில் 83 சதவீதம் ஆகும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிகர வசூலை விட 16.78 சதவீதம் அதிகமாகும். இந்த வசூல் இந்த நிதிஆண்டிற்கான மொத்த பட்ஜெட் மதிப்பீடுகளில் 96.67 சதவீதமாகவும், நேரடி வரிகளின் மொத்த திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 83.19 சதவீதமாகவும் உள்ளது.

Previous Next

نموذج الاتصال