காங்கிரஸ் கட்சியில் இருந்த தந்தை பெரியார் 1924-ம் ஆண்டு வைக்கத்துக்குச் சென்று போராடினார். ஒடுக்கப்பட்ட மக்கள் கோவில் தெருவில் நடக்கக் கூடாது என்று இருந்த தடைக்கு எதிராக கேரளத்தில் இருந்த சீர்திருத்தவாதிகள் போராட்டத்தைத் தொடங்கி, அதில் அனைவரும் கைதாகினர். இந்தப் போராட்டம் நின்றுவிடக் கூடாது என்பதால் தந்தை பெரியார் வைக்கம் சென்று போராடினார். மனைவி நாகம்மையாரையும் அழைத்து வந்தார். தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் மற்றும் சுயமரியாதை இயக்க வீரர்களை அழைத்து வந்து போராடினார். இறுதியில் வெற்றியும் பெற்றார். அத்தகைய போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. அடுத்த ஆண்டு அதன் நூற்றாண்டு விழாவை கொண்டாடப்படுகிறது. இதற்கிடையே, கேரள அரசு சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ம் தேதி முதல் 603 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க வேண்டும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில், இந்தக் கடிதத்தை கேரள மந்திரி சாஜி செரியன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வழங்கினார். கடிதத்தை பெற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் அந்த விழாவில் பங்கேற்க தனது இசைவினைத் தெரிவித்தார்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found
