காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை நடத்தி வருகிறார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபையின் முன்னோடி தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான வீர சாவர்க்கர் ஆங்கிலேயேர்களுக்கு உதவியதாகவும் அவர்களின் ஆதரவை எதிர்பார்த்து கருணை மனு கொடுத்ததாகவும் கூறினார். அதற்கு ஆதாரமாக ஒரு கடிதத்தையும் வெளியிட்டார். ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பிட் பாத்ரா கூறுகையில், நாட்டின் பெருமையாக விளங்கிய வீர சாவர்க்கரை ராகுல் காந்தி அவமரியாதை செய்திருக்கிறார் . வீர சாவர்க்கர் மிகச் சிறந்த விடுதலைப் போராட்ட வீரர் என முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே புகழாரம் சூட்டியுள்ளார். இந்திரா காந்தி சொல்வது பொய்யா அல்லது ராகுல் காந்தி சொல்வது பொய்யா என சோனியா காந்தி குடும்பம் விளக்க வேண்டும். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு சிறை சென்றார்கள் என சோனியா காந்தி குடும்பம் நினைத்துக் கொண்டிருக்கிறது என காட்டமாக தெரிவித்தார். மேலும், வீர சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்நிலையில், தனது தாத்தா குறித்து ராகுல் காந்தி அவமதித்து விட்டார் எனக்கூறி ரஞ்சித் சாவர்க்கர் சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found