இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் ரஷியாவும் அடங்கும். ஆகஸ்ட் மாதம் ரஷியாவிலிருந்து இந்தியாவுக்கு கொள்முதல் செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் அளவு 2.4% குறைந்து 8 லட்சத்து 55 ஆயிரத்து 950 பேரல்களாக இருந்தது. அதே நேரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு அதிகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்ததில் ஈராக் முதல் இடத்தையும், சவுதி அரேபியா 2வது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டன. இந்நிலையில், அக்டோபர் மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம், ஈராக் (20.5%), சவுதி அரேபியா (16%) நாடுகளின் பங்களிப்பை ரஷியா முந்தியது. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் ரஷியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அக்டோபர் மாதம் ரஷியாவிலிருந்து இந்தியாவுக்கு கொள்முதல் செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் அளவு ஒரு நாளைக்கு 9 லட்சத்து 46 ஆயிரம் பீப்பாய்களாக உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு 1 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found