இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "பட்டா இடத்திலேயே சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்போது டின் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ள நிலையில், சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டது ஏற்கத்தக்கதல்ல" என வாதிடப்பட்டது. அரசுத்தரப்பில், "அந்த பகுதியில் ஏராளமான சாதிய மோதல்கள் நிகழ்ந்துள்ளன. அதோடு அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆகவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கூடாது" என வாதிடப்பட்டது. அதைத்தொடர்ந்து நீதிபதிகள், "அதிகாரிகள் மனுதாரரின் மனுவை நிலுவையில் வைத்திருப்பது ஏன்? இதனால் காவல்துறையினரே சிரமத்திற்கு ஆளாகின்றனர். முன்னாள் முதல்வரின் சிலையை வைக்கவே நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. அதிகாரிகளிடம் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டது. ஆகவே அனுமதி பெறும் வரை சிலையை திறக்கக்கூடாது. அதற்கு பொறுப்பேற்று மனுதாரர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது. அதற்கு அனுமதிக்கவும் கூடாது என உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு | Google Tamil News
விருதுநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், "அம்மச்சியாபுரம் பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனின் வெண்கல சிலையை வைக்க அனுமதி கோரிய வழக்கை விசாரித்த தனிநீதிபதி முறையான அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். சிலை வைக்கப்பட்ட பின் நடைபெற்ற அமைதி கூட்டத்தில் அனுமதி பெறும் வரை சிலையை தகரம் அமைத்து மூடிவைக்க முடிவு எடுக்கப்பட்டது. அது முறையாக பின்பற்றப்பட்டுள்ளது. இந்த சூழலில் சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே இது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.