பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தை (நகர்ப்புறம்) சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பயனாளிகளை அங்கீகரிப்பதற்காக பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தேசிய அளவில் 3-வது இடத்தைப் பிடித்த தமிழகத்திற்கு பிரதமர் மோடி விருது வழங்கினார். இந்த விருதை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற நகர்ப்புற வீட்டு வசதி மாநாட்டில், பிரதமர் மோடியிடம் இருந்து தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றுக்கொண்டார். 'அனைவருக்கும் வீட்டு வசதி' திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் பிரிவில் தமிழ்நாடு 3-வது இடத்தையும், சிறந்த மாநகராட்சிகள் பிரிவில் மதுரை 3-வது இடத்தையும், சிறந்த பேரூராட்சிகள் பிரிவில் கோவை மாவட்டம், பெரிய நெகமம் பேரூராட்சி 5-வது இடத்தையும் பிடித்துள்ளன.
அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழகம் 3வது இடம்: விருது வழங்கினார் பிரதமர் மோடி | Google Tamil News