Google Tamil News | மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கட்டும் -பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து


தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி கொண்டாடும் மக்களுக்கு குடியரசு தலைவர், துணைத்தலைவர், பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர், இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி வெளிச்சம் மற்றும் பிரகாசத்துடன் தொடர்புடையது. இந்த மங்களகரமான பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்வாழ்வையும் மேம்படுத்தட்டும். நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சிறபான தீபாவளியை கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Previous Next

نموذج الاتصال