சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை-ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்க சாவடியில் தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. அப்போது அந்த வழியாக வந்த காரில் பயணித்த 3 பேரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் காரை சோதனையிட்ட அதிகாரிகள், அவர்கள் காரில் மறைத்து கடத்தி கொண்டு வந்த ரூ.18.34 கோடி மதிப்புள்ள 35.6 கிலோ வெளிநாட்டு தங்கத்தை மீட்டு, பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை வழியாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் முதன்மையான கடத்தல் தடுப்பு அமைப்பான டிஆர்ஐ சென்னையில் மேற்கொண்ட தீவிர கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளால் ஏப்ரல் மாதம் முதல் தமிழக கடற்கரை வழியாக 105 கிலோவுக்கு மேல் கடத்தப்பட்ட வெளிநாட்டு தங்கம் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found