தலைநகர் டெல்லியில் கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் புதிய பாராளுமன்றத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். கடந்த மாதம், அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட தேசிய சின்னத்தை அவர் திறந்து வைத்தார். தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநில சட்டசபையில் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பி.ஆர்.அம்பேத்கர் பெயரை வைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அந்த தீர்மானத்தை முன் மொழிந்த மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பெயரை புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்றார். இதேபோல் மத்திய அரசு முன்மொழிந்துள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மாநில எரிசக்தி துறை அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி, இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்த மசோதா விவசாயிகள், ஏழைப் பிரிவினர் மற்றும் மின்துறை ஊழியர்களின் நலன்களுக்கு எதிரானது என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found