கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வரும் 26-ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது 412-வது தசரா விழாவாகும். கடந்த 2 ஆண்டாக கொரோனா பரவல் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்டதால், இந்த ஆண்டு தசரா விழாவை வெகுவிமரிசையாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மைசூருவில் முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் மைசூரு தசரா விழாவை முக்கிய பிரமுகர்கள் தொடங்கி வைப்பது வழக்கம். அதாவது மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூக்கள் தூவி சிறப்பு பூஜை நடத்தி விழாவை பிரபலங்கள் தொடங்கிவைப்பார்கள். இந்நிலையில், மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கிவைக்க இருப்பதாக கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த ஆண்டு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கிவைக்க வருகை தருவதால், மைசூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த போலீசாருக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found