ஜனாதிபதி திரவுபதி முர்முவை நெதர்லாந்தின் ராணி மாக்சிமா நேற்று சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: நெதர்லாந்தின் ராணி மாக்சிமா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார். ராணி மாக்சிமாவை வரவேற்ற ஜனாதிபதி, இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரலில் நெதர்லாந்திற்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் அன்புடன் நினைவுகூரப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற, இந்தியா-நெதர்லாந்து மெய்நிகர் உச்சிமாநாட்டின் போது தொடங்கப்பட்ட 'தண்ணீர் மீதான மூலோபாய கூட்டாண்மை' மூலம் இருதரப்பு உறவுகளும் சில ஆண்டுகளாக பல்வேறு பரிமாணங்களில் வலுவடைந்து வருவதாக கூறினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found