ஆண்ட்ரியா படத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இரண்டாவது பாடல் "நெஞ்சை கேளு" சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், 'பிசாசு 2' படத்தை தணிக்கை குழுவிற்கு படக்குழு அனுப்பியதாகவும், படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து படக்குழு சில காட்சிகளை நீக்கி யு/ஏ சான்றிதழ் பெற மீண்டும் தணிக்கை குழுவிற்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Next

نموذج الاتصال