॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அதாஷ்டாதஷோ அத்யாய:।
மோட்ச சன்யாஸ யோகம்
(கடமை மூலம் கடவுள்)
| அர்ஜுன உவாச। |
|
ஸம்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்। த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேஷ ப்ருதக்கேஷிநிஷூதந॥ 18.1 ॥ |
அர்ஜுனன் கூறினான்: தோள்வலிமை மிக்கவனே ! கிருஷ்ணா !
கேசி என்ற அசுரனை கொன்றவனே ! சன்னியாசம், தியாகம் இரண்டின் உட்பொருளையும்
தனித்தனியாக அறிய விரும்புகிறேன்.
|
ஸ்ரீ பகவான் கூறினார்: ஆசை வசப்பட்டு செய்கின்ற செயல்களை விடுவது சன்னியாசம் என்று மகான்கள் அறிகிறார்கள். செயல்களின் பலனை விட்டுவிடுவது தியாகம் என்று தீர்க்கதரிசிகள் சொல்கிறார்கள்.
எல்லா செயல்களும் குற்றம் உடையவை. எனவே எல்லாம் துறக்கபட வேண்டியவை என்று ஒருசிலர் கூறுகின்றனர். வழிபாடு, தானம், தவம் போன்றவற்றவை துறக்ககூடாது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
பரதகுலத்தில் சிறந்தவனே ! தியாக விஷயத்தில் எனது உறுதியான கருத்தை கேள். ஆண்களில் புலி போன்றவனே ! தியாகம் மூன்று விதம் என்று கூறப்பட்டுள்ளது.
|
