ஒன்பதாவது அத்தியாயம் (ராஜவித்யாராஜகுஹ்ய யோகம்)

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத நவமோ அத்யாய:।

ராஜவித்யாராஜகுஹ்ய யோகம்


(பக்தியே ரகசியம்)


ஸ்ரீபகவாநுவாச।
இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே।
ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே அஷுபாத்॥ 9.1 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: எதை அறிந்தால் தடைகளிலிருந்து விடுபடுவாயோ, விஞ்ஜானத்துடன் கூடியதும் அதிரகசியமானதுமான அந்த பாதையை தவறான பார்வையில்லாதவனான உனக்கு சொல்கிறேன்.

ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரமிதமுத்தமம்।
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸுஸுகம் கர்துமவ்யயம்॥ 9.2 ॥


இந்த பாதை வித்தைகளுள் தலை சிறந்தது, அதிரகசியமானது, புனிதபடுத்துவதில் தலை சிறந்தது, கண்கூடாக உணரத்தக்கது, தர்மத்துடன் கூடியது, செய்வதற்கு இன்பமானது, அழிவற்றது. 

அஷ்ரத்ததாநா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரம்தப।
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மநி॥ 9.3 ॥

எதிரிகளை வாட்டுபவனே ! இந்த தர்மத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் என்னை அடையாமல் மரணத்துடன் கூடிய உலக வாழ்க்கையில் உழல்கிறான்.

மயா ததமிதம் ஸர்வம் ஜகதவ்யக்தமூர்திநா।
மத்ஸ்தாநி ஸர்வபூதாநி ந சாஹம் தேஷ்வவஸ்தித:॥ 9.4 ॥

புலன்களுக்கு தென்படாத என்னால் இந்த உலகம் அனைத்தும் வியப்பிக்கபட்டுள்ளது. எல்லா உயிர்களும் என்னிடம் இருக்கின்றன, நானோ அவற்றில் இல்லை.

ந ச மத்ஸ்தாநி பூதாநி பஷ்ய மே யோகமைஷ்வரம்।
பூதப்ருந்ந ச பூதஸ்தோ மமாத்மா பூதபாவந:॥ 9.5 ॥

உயிரினங்கள் என்னில் இல்லை, என் தெய்வீக ஆற்றலை பார்—உயிரினங்களை நானே படைக்கிறேன், தாங்குகிறேன், ஆனால் நான் அவற்றில் இல்லை.

யதாகாஷஸ்திதோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ மஹாந்।
ததா ஸர்வாணி பூதாநி மத்ஸ்தாநீத்யுபதாரய॥ 9.6 ॥

எங்கும் நிறைந்ததும் ஆற்றல் வாய்ந்ததுமான காற்று எப்படி எப்போதும் ஆகாசத்தில் இருக்கிறதோ, அப்படியே எல்லா உயிர்களும் என்னிடம் உள்ளன என்பதை தெரிந்துகொள்.

 

Previous Next

نموذج الاتصال